எட்ட இருப்பதால்
அற்றுவிட்டதோ பாசம்!
உன் கர்ப்பத்தில்தானே பிறந்தார்கள்!
என் சகோதரப் பாசம் மிச்சமிருக்கிறதே....
மாற்றான் பிள்ளைகளுக்கும் தாயாய் இருந்த நீ
உன் பிள்ளைகளுக்குப் பேயான தேனோ?!
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்..
குதறியிருக்கிறது இன்று...
போடி!
உன் கண்களை இறுக்க மூடிக்கொள்.
உன் இடக்கண்ணில் ஓர் துளிதான் அவர்கள்.
ஓர் துளிதான்... ரத்தத்தில் மிதக்கிறது திசை தெரியாமல்
அடடே.. உன் கண்ணீரின் சக்திதான் என்னே!
என்னை இன்று உலகம் தூற்றுகிறது
ஐயோ! இல்லை... இல்லை... தர்மம் தூற்றுகிறது
நாளை உன்னையும் தூற்றும்... காலமும் தூற்றும்
நாளை ஜெயிக்கப் போவது அவர்களே..
அப் பொழுதில்
உன் மடியைக் காட்டிலும்
என் சகாக்களின் மடிதான் இனிக்கும் எனக்கு..
இன்று தாய்ப் பாசத்திலும் உன்னை விஞ்சிவிட்டார்கள்.
உன் குழந்தைகளாயிற்றே!
உன் மடியில் சுரக்கும் பாலுக்காக இன்றும் ஏங்குகிறார்கள் பாவம்!
கண்களை இறுக்க மூடிக்கொள்
நாளை நீ ஒப்பாரியே வைத்தாலும்
அப் பொழுது அது நீலிக்கண்ணீராகத்தான் அறியப்படும்
விழிப்பாயா என் தாயே...
- வெங்கடேசன்

No comments:
Post a Comment